பிரான்ஸிலும், லண்டனிலும் பெரும்பாலும் இலங்கையர்கள் வழிபாடு செலுத்தும் மேலும் இரண்டு வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன.
மே14, 2009
பகுப்புகள்: LTTE News . குறிச்சொற்கள்: france, uk, london . பதிவர் : lttetoday . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
பிரான்சில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மக்கள் எழுச்சிப்போராட்டம் 39வது நாளாகத் தொடர்கின்றது. எனவே அனைத்து மக்களும் தொடர்ச்சியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மே14, 2009
பகுப்புகள்: LTTE News . குறிச்சொற்கள்: france, protest . பதிவர் : lttetoday . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
எந்த நேரத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆளும் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்
மே14, 2009
பகுப்புகள்: LTTE News . குறிச்சொற்கள்: lanka, ltte, rajapakse . பதிவர் : lttetoday . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
இலங்கையில் மோசமாகிவரும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புச்சபையும், பெரும் கவலை வெளிட்டுள்ளதுடன், அதில், வன்னிப்பகுதியில் மோசமாகிவரும் மனிதாபிமான அவல நிலைமைகள் குறித்து, ஐ.நா பாதுகாப்புச் சபையின் பதினைந்து உறுப்பினர்களும், பெரும் கவலையடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மே14, 2009
பகுப்புகள்: LTTE News . குறிச்சொற்கள்: russia, un, UNo . பதிவர் : lttetoday . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடக்கும் மோதலில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
மே14, 2009
பகுப்புகள்: Uncategorized . குறிச்சொற்கள்: obama, wanni . பதிவர் : lttetoday . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
வன்னியில் இடம்பெறும் சிறிலங்கா இனவெறி அரசின் தமிழர் மீதான கொடுமைகளை இனங்காட்டும் வகையிலும் ஸ்ருட்காட் நகரில் பிரபல்யமான Südwest rundfunk தொலைக்காட்சி, வானொலி நிலையத்தின் முன்றலின் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.
மே14, 2009
பகுப்புகள்: LTTE News . குறிச்சொற்கள்: german, wanni . பதிவர் : lttetoday . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
கடந்த 38 நாட்களாக பிரித்தானிய நாடாளுமன்றம் அதிரும் அளவிற்கு கோரிக்கை கோசங்களை எழுப்பியும், தமிழ் மக்கள் மீது பாராமுகம் காட்டும் பிரித்தானிய அரசாங்கத்திடம் தங்கள் வாய்களை கறுப்பு துணியால் கட்டி அமைதியாக பதாதைகள் மூலம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகின்றனர்.
மே14, 2009
பகுப்புகள்: LTTE News . குறிச்சொற்கள்: britain, britan, ltte, protest, uk . பதிவர் : lttetoday . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
Sri Lanka Army (SLA) fired artillery shells hit the makeshift hospital in Mu’l'li-vaaykkaal East, killing at least 38 patients who were waiting for treatment at the hospital, a medical staff told TamilNet. “There are many more killed inside the hospital premises, but I can only confirm that 38 casualties that I have witnessed near the main theatre upto 2:53 p.m.,” the medical staff told TamilNet. Many shells have hit the makeshift hospital premises across the road. Meanwhile, a patient who reached an administrative office put the casualty figures at 100 and said he had witnessed that an ICRC worker was killed. Meanwhile, LTTE’s Director of Peace Secretarait S. Puleedevan when contacted by TamilNet said 39 female patients at a counselling aid center for mentally ill women were massacred by targeted SLA shelling in the morning. More than 40 patients were feared wounded, he said.
Most of the medical staff and patients are staying inside the bunkers, unable to save lives, the medical staff at the hospital told TamilNet.
The roads are congested with vehicles and it is not possible for journalistic sources to witness and verify all the details on time.
The hospital has been hit for the third time in one week
மே13, 2009
பகுப்புகள்: LTTE News . குறிச்சொற்கள்: genocide, sla, hospital . பதிவர் : lttetoday . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
இலங்கையில் தமிழ் மக்கள் படையினரால் ஆயுதங்களுக்கான உணவாக பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகமும் அதனோடு இணைந்த குழுக்களும் குற்றம் சுமத்தியுள்ளன. |
| கனரக ஆயுதங்களை பாவிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்த பின்னரும் அரசாங்கம் வைத்திய சாலையின் மீது மேற்கொண்ட எறிகனைத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் பொது மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதால் அந்த பிரதேசங்கில் கனரக ஆயுதங்களை பயன்படுத்த போவதில்லை என அரசாங்கம் கூறியதன் பின்னரும் ஐக்கிய நாடுகளின் செய்மதி புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் கனரக ஆயுதப் பாவனை புலனாகிறது.
இந்த நிலையில் ‘அண்மையில் வெளியான செய்மதிப் புகைப்படங்களும் சாட்சியங்களின் எண்ணிக்கையும் மோதல் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற பொது மக்களின் அகோரமான கொலைகள் உறுதி செய்வதாக” மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.
‘அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புகளுக்கான ஆயுதங்களுக்கு பொது மக்களை இரையாகின்றனர்” என அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பல்வேறு தாக்கதல்களினால் பொதுமக்கள் பலர் அன்றாடம் கொல்லப்படுகின்றமை உறுதியாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ‘ மோதல் பிரதேசங்களுக்கு சுதந்திர ஊடகவியலாளர்களும் உதவி நிறுவன ஊழியர்களும் மற்றும் பொது ஊழியர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமையும் கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு பிரதானமாக உதவிகளை வழங்கும் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் சீனா இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கொழும்பு அரசாங்கம் மோதல் பிரதேசங்களில் பொது மக்களுக்கு எதிரான தமது கனரக ஆயுதப்பாவனையை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இரண்டு தரப்பினரும் அனுமதியளிக்க வேண்டும் எனவும் இலங்கையின் மனிதாபிமான நடைமுறை சூழிநிலை குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கலந்துரையாட வேண்டும் எனுவும் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார். |
மே13, 2009
பகுப்புகள்: LTTE News . குறிச்சொற்கள்: genocide, lanka, weopens, peoples, human, rights . பதிவர் : lttetoday . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்
மோதல் இடம்பெறும் பிரதேசங்களில் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்காவும் பிரித்தானியாவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. |
| வடக்கு இலங்கையில் கடந்த சில நாட்களில் மாத்திரம் ஏராளமான பொது மக்களின் உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் மெலிபண்ட் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு தரப்பினரும் அகோரமான மோதல்களை தவிர்த்து மோதல் பிரதேசங்களில் சிக்கியுள்ள பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிவகைகளை உருவாக்குமாறு அவர்கள் அந்த அறிக்கையில் கோரியுள்ளனர்.
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 27ம் திகதி அரசாங்கம் அறிவித்ததை போல கனரக ஆயுதப் பாவனையை முற்றாக நிறுத்த அரசாங்கம் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் மோதல் பிரதேசங்களில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு மனிதாபிமான குழுவினை மோதல் இடம்பெறும் பிரதேசத்திற்கு அனுப்ப இருத்தரப்பினரும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். |
மே13, 2009
பகுப்புகள்: LTTE News . குறிச்சொற்கள்: america, britain, tamils, us, usa . பதிவர் : lttetoday . மறுமொழிகள்: r கருத்துத் தெரிவிக்கவும்